|
|
kumra122's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: சொன்னா கேக்கனும் சின்னா..... |
6 |
|
Post Message |
நண்பர்களுக்கு வணக்கம்....இதற்கு முன் உள்ள வாசகர்கள் பதிவில் சிறிது கருத்து வித்யாசங்களும் அதனால் சிறிது ஆதரவாகவும் எதிராகவும் கருத்து பதிவை காண முடிகிறது.....நான் வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால் நாம் இந்த கருத்து மோதல் பதிவுகளை இத்துடன் நிறுத்துவதே நன்று.....நண்பர் ocean அவர்கள் ஒரு கைதேர்ந்த எழுத்தாளர்....மிகவும் சிரத்தை எடுத்து அவர் அவருடைய தனிப்பட்ட வேலைகளையும் பார்த்துக்கொண்டு நமக்காக, நம் மகிழ்ச்சிக்காக அவர் வாழ்வின் நேரத்தை நமக்காக செலவிட்டு இந்த கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்....இந்த பதிவுகளைப்பார்க்கும்போது அவர் எந்த நோக்கத்திற்காக எழுதுகிறாரோ அதை விடுத்து வேறு பாதையில் நமது பதிவுகள் இருந்தால் அவர் மனம் வருந்தாதா??
யாருக்கும் யோசினை கூற உரிமை உண்டு....அதை ஒரு முறை கூறிவிட்டு நின்றுவிடுவோம்....நண்பர் ocean அவர்களுக்கு அந்த யோசினை அவர் கற்பனை செய்து வைத்திருக்கும் கதையோட்டத்திற்கு பொருந்துமாயின் அதை அவரே தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும்....நாம் விலகி இருப்போம்....வீட்டில் ஒரு அருமையான உணவு சமைத்து பரிமாறும் போது அதன் சுவையை பற்றி பெருமை கூறுவதே நன்று ...இல்லையேல் அதை இன்னும் அதன் போக்கில் மெருகேற்ற யோசினைகள் கூறலாம்....இட்லிக்கு பதில் தோசையோ பூரியோ சுட்டிருக்கலாமே என்று கூறினால் அதை சிரத்தை எடுத்து செய்த மனம் எவ்வளவு வருந்தும்...
அதனால் நண்பர்கள் இனி ஊக்கமான, கதையோட்டத்திற்கு பொருந்தும் பதிவுகளை பதிவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.....
இந்த கருத்தும் யார் மனதையாவது புண்படுத்துமாயின் அதற்க்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.... |
|