|
|
kamarasa's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: மீண்டும் ஒரு தவறு |
6 |
|
Post Message |
இந்த கதை ஆரம்பிக்கும் போது சில நாட்களுக்கு ஒரு முறை அப்டேட் வந்தது.. பிறகு அது வாரம் ஒரு முறை என மாறியது.. பிறகு மாதம் ஒரு முறை என மாறியது.. பிறகு 3 மாதத்திற்கு ஒருமுறை அப்டேட் வந்தது.. இப்போது 4 மாதமாக ஒரு அப்டேட்டும் இல்லை.. கதையாசிரியர் 6 மாதத்திற்கு ஒரு அப்டேட் என நகர்ந்து விட்டார் போலிருக்கிறது..
கதையாசிரியருக்கு தனிப்பட்ட தேவைக்களுக்கும்.. கதையை யோசித்து எழுதவும் நேரம் தேவைப்படும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.. போதுமான அளவு நேரம் தேவைப்படுகிறது என்பதையோ.. அல்லது எப்போது அடுத்த அப்டேட் என்பதையாவது கதையாசிரியர் தெரிவிக்கலாம்.. இல்லையெனில் இந்த திரி முழுவதும் வாசகர்களால் அப்டேட் கேட்டு எழுதப்படும் பதிவுகளால் நிரம்பி வழியும்.. வாசகர்களை பொறுத்தவரை ஏங்கே அப்டேட் கேட்காமல் விட்டால்.. கதையாசிரியர் தனது கதை மீது வாசகர்களுக்கு ஆர்வம் இல்லையோ என நினைத்து கதையை நிறுத்திவிடுவாரோ என்ற பயம்.. (ஏற்கனவே பல பஞ்சாயத்துகள் இது போல் இந்த தளத்தில் நடந்துள்ளது..)
@BlueShirt உங்களுக்கான போதுமான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.. அதில் தவறேதுமில்லை.. முடிந்தால்.. அடுத்த பதிவு எப்போது என பதிவிடுங்கள்.. அதுவரை அப்டேட் கேட்கும் பதிவுகள் கொஞ்சம் குறையும்..
இந்த கதை நன்றாக இருப்பதாலேயே.. அப்டேட் இடைவெளி அதிகரித்தாலும் வாசகர்கள் பின் தொடர்கிறார்கள்.. அவர்களை மேலும் காக்க வைக்க வேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். |
|